கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் வீட்டு குப்பையை பொது இடங்களில் வீசும் நிலையை மாற்றும் பொருட்டு, கரூர் மாநகராட்சி சார்பில் ‘எனது கரூர் எனது பொறுப்பு' என்ற பெயரில் புதிய விழிப்புணர்வு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அப்புறப்படுத்தி, அந்த இடங்களில் வண்ண கோலமிட்டு, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருந்த இடத்தை துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் நேற்று தூய்மைப்படுத்தி, அந்த இடத்தில் வண்ண கோலமிட்டு, 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பையை வீச வேண்டாம். மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும். கரூர் மாநகரை குப்பையில்லா மாநகராக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago