தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஒருநபர் ஆணைய விசாரணை- இதுவரை 1,037 பேர் சாட்சியம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் இதுவரை 34 கட்ட விசாரணையை முடித்துள்ள நிலையில் 1,037 பேர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. இதில் 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த என். வெங்கடேஷ் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை என சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நேற்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி சார் ஆட்சியராக பணியாற்றிய எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய வீரப்பன் ஆகியோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இத்துடன் 34-வது கட்ட விசாரணை நிறைவடைந்தது.

ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை மொத்தம் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதில் 1,037 பேர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட விசாரணை ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும்.

அப்போது துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடியில் பணியாற்றிய எஸ்பி, தென்மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்டோர் விசாரிக்கப்படவுள்ளனர்.

ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதம் வரை ஆணையத்துக்கு காலக்கெடு உள்ளது. தற்போது விசாரிக் கப்படும் நபர்கள் அனைவரும் முக்கிய அதிகாரிகள் என்பதால் ஒருநபரிடம் விசாரிக்க 2 நாள் வரை ஆகலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்