தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ம்ஆண்டில் கொலை உள்ளிட்ட அனைத்து குற்ற வழக்குகளும் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மொத்தம் 200 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் 2021-ம் ஆண்டு செயல்பாடுகள் தொடர்பாக அவர் கூறியதாவது: மாவட்டத்தில் இந்த ஆண்டுமொத்தம் 200 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 75 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கு
இந்த ஆண்டு இதுவரை 47 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 58 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.
கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு தொடர்பாக இந்த ஆண்டு மொத்தம் 532 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதில் 353 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.3 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 975 மதிப்புள்ள பொருட்கள் மற்றும்பணம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் பதிவான 451 வழக்குளில் 266 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 416 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 96 லட்சத்து 9 ஆயிரத்து 220 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள்
போதை பொருள் தடுப்பு குற்றத்தில் இந்த ஆண்டு மொத்தம்380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 960 மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் உள்ளிட்ட 356 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை இந்த ஆண்டு 210 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு, 221 கிலோ போதைப் பொருள் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக இந்த ஆண்டு மொத்தம் 1,735 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 1 லட்சத்து 2 ஆயிரத்து 091 மதிப்புள்ள 28,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.58 லட்சத்து 44 ஆயிரத்து 536 மதிப்புள்ள 8676 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுபானம் விற்பனை
மது விற்பனை செய்தது தொடர்பாக இந்த ஆண்டு மொத்தம் 5,076 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,148 பேர் கைது செய்யப்பட்டு 11,332 லிட்டர் மதுபானம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.21,91,030 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2,182 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டு, 3,543 லிட்டர் மதுபானம் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மணல் கடத்தல்
ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்பந்தமாக இந்த ஆண்டு 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 183 எதிரிகள் கைது செய்யப்பட்டு 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 56 வழக்குகள்கூடுதலாக பதிவு செய்யப்பட்டு, கூடுதலாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர் என்றார் எஸ்பி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago