புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யத் தடையில்லை: அமைச்சர் சேகர்பாபு

By செய்திப்பிரிவு

சென்னை: புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 739 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நாளை இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்யத் தடையில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளத் தடையில்லை. ஆனால் உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டுகிறோம். டிச.31 இரவு 12 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி 12 மணி வரை புத்தாண்டு நாள் தான். ஆகையால் மக்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் கோயில்களில் குவிவதைத் தவிர்த்து ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு கோயில்களுக்குச் செல்ல வேண்டுகிறோம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்