சிசு கொலையை தடுக்க சீர்செய்வதை குறையுங்கள்: அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பெண் சிசுக்கொலை நடை பெறாமல் தடுக்க திருமணத்தின் போது பெண்களுக்கு சீர் செய் வதை குறைக்க வேண்டும் என்று சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

மதுரை கே.கே. நகரில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் தென் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். எம்எல்ஏ பூமிநாதன், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணை யாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியதாவது:

மகளிருக்கு எதிராக குற்றம்புரி வோருக்கு விதிக்கப்படும் கடும் தண்டனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் குற்றங்கள் குறையும்.

பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத் தப்படாமல் இருந்தன. தற்போது இந்த ஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்பாக பாலியல் துன்பு றுத்தல், வன்கொடுமைகள் தொடர்பாக தற்போது தினமும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக இந்த குற்றங்கள் அதி கரித்துவிட்டதாக கருத முடியாது. அதிக சீர்செய்ய வேண்டுமே என்பதற்காகவே பெண் சிசு கொலை நடக்கலாம். அதனால், திருமணத்தின்போது சீர்செய் வதைக் குறைக்க வேண்டும். பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்