திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டில் 25 பவுன் நகைகளை திருடிவிட்டு தீ வைத்த மர்ம நபர்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிபவர் வீட்டில் 25 பவுன் நகைகளை திருடிவிட்டு, வீட்டி னுள் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்களுக்கு மர்மநபர்கள் தீவைத்துச் சென்றதால் வீடு முழுவதும் தீ பரவி பொருட்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் திருநகர் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். திண் டுக்கல் தலைமை தபால் அலு வலகத்தில் உதவி அலுவலராகப் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு மணிமாறன் வீட்டில் இல்லாததால், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளைத் திருடினர். பின்னர் வீட்டில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப் புடவைகள், கணினி உள்ளிட்ட பொருட்களை பீரோவில் இருந்து எடுத்து அவற்றுக்கு மொத்தமாக தீ வைத்துவிட்டுச் சென்றனர். இதில் கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கருகின.

வீட்டினுள் தீப்பற்றி எரிந்ததை பார்த்த பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டினுள் பரவிய தீயைக் கட்டுப்படுத்தினர். இதுதொடர்பாக நகர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்