திண்டுக்கல்லில் குடிநீர் வழங்கக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டை மக்கள் முற்றுகை

By செய்திப்பிரிவு

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணக் கோரி, திண்டுக்கல்லில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் வீட்டை பள்ளப்பட்டி ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள பள்ளப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஏ.பி.நகர், பிஸ்மி நகர் பகுதி மக்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஏ.பி.நகர், பிஸ்மி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. இதனால் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. கூலி வேலை பார்ப்பதால், காசு கொடுத்து தண்ணீர் வாங்குவது இயலாத காரியம். மேலும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தின மும் சிரமப்படுகிறோம். இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அமைச்சரிடம் முறையிட வந்தோம் என்றனர்.

அமைச்சர் வீட்டில் இல்லாததால் அங்கு வந்த போலீஸார் பொது மக்களின் புகார் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்