அயல் பணி மூலம் வெளியேறும் மருத்துவர்கள், செவிலியர்கள்: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிக்கல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சத்தமில்லாமல் அயல் பணி மூலம் வெளியேறி வருவதால்,கற்பித்தல் பணி, நோயாளிகளுக்கு சிகிச்சைப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல் லூரியில் பேராசிரியர்கள், இணைப் பேராசி ரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 210 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சில மாதங்களாக பொது அறுவை சிகிச்சை, பல், தோல், கண், உடற்கூறுயியல் துறைகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அயல்பணி மூலம் சென்றுவிட்டனர்.

270 செவிலியர்களில் 20-க்கும் மேற்பட்டோர் அயல் பணியில் சென்று விட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலும் ஊதியம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்துதான் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் மாறுதலில் சென்றதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப் பதிலும், மாணவர்களுக்கு கற்பித்தலிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவப் பணியாளர்கள் சிலர் கூறுகையில், ‘சிலர் சிவகங்கை போன்ற பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய விரும்பவில்லை. இதனால் அயல்பணி மூலம் சென்றுவிடுகின்றனர்.

அனைத்து துறைகளிலும் பேராசிரி யர்கள் இருந்தால்தான் மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்பிக்க முடியும். மேலும் பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் அடிப்படையில் தான் இந்தாண்டு இந்திய மருத்துவக் கழகம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதுநிலை படிப்புகளை ஒதுக்கி உள்ளது. அம்மாணவர்கள் சேரவுள்ள நிலையில் அயல்பணி வழங்கி வருகின்றனர்.

மேலும் மருத்துவர்கள் இடமாறு தலில் வேறு ஊர்களுக்குச் சென்றால் கூட காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு புதியவர்களை நியமிக்கலாம். ஆனால் அயல்பணியில் செல்வதால், அப்பணியிடங்களில் ஆட்கள் பணிபுரிவதாகவே காண்பிக்கப்படும்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்