நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக இன்று திருச்சிக்கு வருகைதரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டி.வி.எஸ் டோல்கேட்டிலிருந்து தாயனூர் கேர் கல்லூரி வரை வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்குமாறு திமுகவினருக்கு அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையில் ரூ.1,084 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அடிக்கல் நாட்டியும், சத்திரம் புதிய பேருந்து நிலையத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தும், பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றும் விழா திருச்சி தாயனூர் கேர் கல்லூரியில் டிச.30-ம் தேதி(இன்று) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ள வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகையிலிருந்து தாயனூர் கேர் கல்லூரி வரை வழிநெடுகிலும் திருச்சி மாவட்ட, திருச்சி மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago