பெண் தொழில்சார் சமூக வல்லுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் பர்கூர் ஊராட்சி ஒன்றியங்களில் 102 பெண்கள் தொழில்சார் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் தலாஒருவர் வீதம் பெண்கள் தொழில்சார் சமூகவல்லுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பட்டயப் படிப்பும், 25 முதல் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். மக்கள் அமைப்புகளில் நிர்வாகியாகவோ, மக்கள் பிரதிநிதியாகவோ இருத்தல்கூடாது. தொழில் முன்அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் வரும் 5-ம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாகவோ அல்லது ஒன்றிய திட்ட அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டும்.

எழுத்து மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊக்கத்தொகை

தேர்வு செய்யப்படுபவர்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 20 நாட்கள் பணியாற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஒன்றிய திட்ட மேலாண்மை அலுவலகம் பர்கூர் 95853 55493, காவேரிப்பட்டிணம் 70105 91755 மற்றும் கிருஷ்ணகிரி 88255 58484 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், கிராம சேவை மைய கட்டிடம், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்