யுஜிசி ‘நாக்’ தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் 2-ம் இடம் ; தமிழக அளவில் முதலிடம் : துணைவேந்தர் தகவல்

By செய்திப்பிரிவு

தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழுவான யுஜிசி ‘நாக்’ அமைப்பின் தரப்புள்ளிகளில் சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அகில இந்திய அளவில் 2-வது இடத்தையும், தமிழகப் பல்கலைக் கழகங்களில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி, ஆராய்ச்சி, கட்டமைப்பு, விரிவாக்கப் பணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்யும் தன்னாட்சி அமைப்பான தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழு எனப்படும் யுஜிசி ‘நாக்’ அமைப்பின் கூர்ந்தாய்வுக் குழுவினர் கடந்த 22-ம் தேதி முதல்24-ம் தேதி வரை 3 நாட்கள் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இக்குழுவின் தரப்படுத்தலில் 4 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் பாடத்திட்டங்கள் வடிவமைப்பில் 3.6 புள்ளிகள், கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் 3.76 புள்ளிகள், ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகளில் 3.72 புள்ளிகள், கட்டமைப்பு மற்றும் கற்றல் வள ஆதாரங்களில் 3.70 புள்ளிகள், நிர்வாகம், தலைமைத்துவம், மேலாண்மையில் 3.33 புள்ளிகள், நிறுவனத்தின் மதிப்பீடுகள், சிறப்பு நடைமுறைகளில் 3.96 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்தமாக சராசரி 3.61 புள்ளிகளைப் பெற்று பெரியார் பல்கலைக் கழகம் A தரநிலையை எட்டியுள்ளது.

இக்குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி பெரியார் பல்கலைக் கழகம் தமிழகத்தில் 3.61 புள்ளிகளைப் பெற்று A பெறும் முதல் மாநிலப் பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. இந்திய அளவில் அதிகப் புள்ளிகள் பெற்று A பெறும் மாநில அரசின் 2-வது பல்கலைக் கழகமாகவும் பெரியார் பல்கலைக் கழகம் தரம் உயர்த்தியுள்ளது.

இத்தரம் பெற உறுதுணையாக இருந்த ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், பதிவாளர், தேர்வாணையர், புல முதன்மையர்கள், பேராசிரி யர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்