சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களது பள்ளி செல்லும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து மனு அளிக்க வந்த மக்கள் கூறியதாவது:
"ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி, கார்கூடல்பட்டி, மங்களபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகளைப் பெற இருளர் பழங்குடி இன சாதிச் சான்றிதழ்கள் மிகவும் அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
குறிப்பாக பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி நிலையங்களில் சேர்வது உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் அவசிய தேவையாக உள்ளது.
» பிஹாரில் கரோனா 3-வது அலை தொடங்கி விட்டது; மக்களுக்கு நிதிஷ் குமார் எச்சரிக்கை
» வீடிழந்தவர்களுக்கு திருவொற்றியூரிலேயே குடியிருப்புகளை வழங்குக: முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் கல்வி உதவித்தொகை உட்பட அரசின் சலுகைகள் எதுவும் பெற முடியாத நிலை உள்ளது. பலர் தங்களின் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.
சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான முகாம் தேதியை மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவித்து சான்றிதழ் வழங்க வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago