மதுரையில் அறிவிப்போடு நின்றுபோன ‘மெகா’ திட்டங்கள்: உள்ளூர் அமைச்சர்கள் குரல் கொடுப்பார்களா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கிடப்பில் கிடக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, விமான நிலைய விரிவாக் கம், கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மெகா திட்டங்களை நிறைவேற்ற உள்ளூர் அமைச் சர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் மதுரைக்குப் பின்னர் உருவான நகரங்கள் இன்று அடிப்படை, சாலை கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற் சாலைகள் தொடங்குவதிலும் பெரிய அள வில் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், மதுரையில் அடிப்படை வசதிகள் மற்றும் தொழில்வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. முற்றிலும் சுற்றுலா, மருத்துவத்தை நம்பியே உள்ளது.

இதனால், படித்த இளைஞர்கள், சென்னை, கோவை, பெங்களூரு நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். ஓசூர், கோவை, சென்னையை போல் மிகப்பெரிய கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்பது கடந்த கால் நூற்றாண்டு கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

சிறு, குறு தொழிற்சாலைகள் உருவான தால்தான் சென்னை, கோவை, கிருஷ் ணகிரி மாவட்டங்கள் தொழில் துறையில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை அடைந்தன. தொழில் வளர்ச்சி பெற்றதால் சாலை கட்டமைப்புகளும் பிரம்மாண்டமாக மாறிவிட்டன.

ஆனால், மதுரையில் நத்தம் சாலையில் மட்டுமே பறக்கும் பாலப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பாலம் அறிவித்து 5 ஆண் டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீட்டோடு நிற்கிறது. நிலம் கையகப்படுத்தினால் உள்ளூர் முக்கிய புள்ளிகளைப் பகைக்க வேண்டும் என்பதால் இத்திட்டம் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

இத்திட்டம் நிறைவேறாததால் தினமும் லட்சக்கணக்கான மக்கள், வாகன ஓட்டு நர்கள் கோரிப்பாளையத்தைக் கடக்கப் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கியதோடு நிற்கிறது. இத்திட்டத்துக்கு கடன் வழங்குவதாகக் கூறிய ஜைக்கா நிறு வனம் இதுவரை கடன் வழங்கவில்லை. மத்திய அரசும் நிதி ஒதுக்கவில்லை. நடப்பாண்டு தற்காலிக கட்டிடத்தில் ‘எய்ம்ஸ்’ எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான அறிகுறி இதுவரை இல்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வாரத்தில் முடிந்துவிடும் அதன் பிறகு பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 5 மாதங்களுக்கு முன் தெரிவித்தார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபோதிலும் தற்போது வரை பணிகள் தொடங்கவில்லை.

இதற்கிடையே மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்தது. இதற்காக மதுரை எம்பி சு.வெங்கடேசன் மட்டுமே குரல் கொடுத்து வருகிறார். உள்ளூர் அமைச்சர்கள் இதுவரை சொல்லும்படியாக குரல் கொடுக்கவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்கு அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தொழில் முனைவோர் ஆதங்கப்படுகின்றனர்.

பஸ்போர்ட், மோனோ ரயில் திட்டம், சிம்மக்கல் முதல் பெரியார் பஸ்நிலையம் வரையிலான பறக்கும் பாலம், சமயநல்லூர்-உத்தங்குடி வரையிலான உள்வட்டச் சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நிற்கின்றன.

உள்ளூர் திமுக அமைச்சர்கள் குரல் கொடுத்து கிடப்பில் கிடக்கும் ‘எய்ம்ஸ்’ முதல் விமான நிலையம் வரையிலான பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்