திமுக ஆட்சியை மத்திய அரசு பாராட்டுகிறது: அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சியை மத்திய அரசு பாராட்டுகிறது என அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.141.61 லட்சம் மதிப்பில் 8 புதிய கட்டிடங்கள் மற்றும் ரூ.50.59 கோடியில் 2,487 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போளூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். ஆரணி கோட்டாட்சியர் கவிதா வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் பிரதாப், தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் ஆகியோர் பேசினார்.

விழாவில் நலத்திட்ட உதவி களை வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, “மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என திமுக ஆட்சியை மத்திய அரசு பாராட்டுகிறது. மாவட்டத்தில் வட பகுதியான செய்யாற்றில், திமுக ஆட்சியில்தான் சிப்காட் தொடங்கப்பட்டது. அதேபோல், மாவட்டத்தின் தென் பகுதியான செங்கம் அருகே சிப்காட் தொடங்க வேண்டும் என எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கான நிலம் கையகப்படுத்த முயற்சிக்கும்போது சில விவசாயிகள், நிலத்தை கொடுக்க மறுக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சிப்காட் கொண்டு வரப்படுகிறது. யார் எதிர்த்தாலும் செங்கம் அருகே புதிய சிப்காட் கண்டிப்பாக வந்தே தீரும்” என்றார்.

இதில், மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் கம்பன், திவ்யா கல்விக்குழு நிறுவனர் செல்வராசன், ஒன்றிய குழுத் தலைவர் பெ. சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டாட்சியர் சண்முகம் நன்றி கூறினார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்