வகுப்பறையை சுத்தம் செய்யும் போது கால் விரல் இழந்த மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

By கி.மகாராஜன்

பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில் மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீழ உறப்பனூரைச் சேர்ந்தவர் பி.ஆதிசிவன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

என் மகன் சிவநிதி. திருமங்கலம் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2015-ல் 8-ம் வகுப்பு சி படித்து வந்தார். கடந்த 24.6.2015-ல் வகுப்பாசிரியர் மாணவர்களை வகுப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அப்போது மேஜை விழுந்து சிவநிதியில் இடது கால் பெரு விரலுக்கு பக்கத்து விரல் துண்டானது. என் மகன் ராணுவத்தில் சேர விரும்பினார். கால் விரல் துண்டானதால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது. உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சு்த்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால் மனுதாரின் மகனின் காலில் ஒரு விரல் துண்டாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு 4 வாரத்தில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்