மே மாதத்தில் பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By செய்திப்பிரிவு

மே மாதத்தில் பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோட்டூர்புரத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அதில் அவர் கூறும்போது, “பழைய பள்ளிக் கட்டிடங்களைக் கண்டறிதல், பள்ளியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை 14417 என்ற புகார் எண்ணில் மாணவர்கள் தெரிவிக்கலாம். பழைய கட்டிடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் பழைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்