மாமல்லபுரத்தில் ஏடிஎம் மைய காவலாளி கழுத்து அறுத்து கொலை: கொள்ளை முயற்சியில் கொடூரம்

By செய்திப்பிரிவு

மாமல்லபுரத்தில் தனியார் வங்கி யின் ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சியில் காவலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் எஸ்பி விஜயக்குமார் கூறுகை யில், மாமல்லபுரம் அருகில் உள்ள கிருஷ்ணங்கரை கிராம பகுதியில் உள்ள ஐசிஐசியை வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இதில் சாத்தான்குளம் பகுதி யைச் சேர்ந்த முருகன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்று கிழமை அதிகாலை ஏடிஎம் மையம் அமைந்துள்ள பகுதியில் மாமல்லபுரம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காவலாளியை குரல் கொடுத்து எழுப்பியுள்ளனர். அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த போலீஸார் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்துகிடந்தது தெரிந்தது.

ஏடிஎம் மையத்தை சோதனை செய்ததில் அங்கு கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிந் தது. மர்மநபர் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்திருக் கிறார். உடைக்க முடியாததால் தப்பியுள்ளார். அதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

காவலாளியின் பெயர் முருகன் (58) கடந்த ஐந்தாண்டு களாக காவலாளியாக பணி புரிந்து வந்துள்ளார். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளை முயற்சி யில் ஈடுபட்டுள்ள மர்ம நபர் முக முடி அணிந்திருந்தது பதிவாகி யுள்ளது. இந்த உருவத்தை கொண்டு, கொள்ளையனை தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்