சென்னை: தமிழகத்தில் ஜன.2 வரை அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதைமீறி பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக கடந்த வாரம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு பள்ளிகளுக்கான அரையாண்டுவிடுமுறை உத்தரவைப் பிறப்பித்தது. எனினும், சில பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தற்போது விடுமுறை தினங்களில் சில பள்ளிகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ''தமிழகத்தில் 1 முதல் 12 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்விற்காக டிசம்பர் 25-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் நேரடி வகுப்புகள் மட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிடுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago