கோவில்பட்டியில் ஜனவரி 17 வரை புத்தக கண்காட்சி; புத்தாண்டுக்கு 50 சதவீதம்வரை தள்ளுபடி

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜனவரி 17 வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சி கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திருநெல்வேலி சார்பில் கோவில்பட்டியில் 36 வது புத்தக கண்காட்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று தொடங்கியது. கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புத்தகக் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.

Caption

புத்தகக் கண்காட்சியில் பொது அறிவு, விஞ்ஞானம், அறிவியல், வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், அரசியல், ஆன்மீகம் போட்டித் தேர்வு புத்தகங்கள் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

26-ம் தேதி முதல் ஜனவரி 17-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. 2022 புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் 10சதவீதம் முதல் 50 சதவீதம் வரை புத்தாண்டு சிறப்பு தள்ளுபடியாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்