பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயில்களில் 75% டிக்கெட் விற்று தீர்ந்தன

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு தாம்பரம் - திருநெல்வேலி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம், திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குதொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும், முன்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 25-ம் தேதி (நேற்று) காலை முதல் டிக்கெட் முன்பதிவு நடந்தது.

பொங்கல் சிறப்பு ரயில் களில் 75 சதவீத டிக்கெட்கள் விற்றுவிட்டன. தேவைப்படும் போது வழக்கமான விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்