இணைய வழக்குகளில் விரைவாக துப்புதுலக்க வசதி; தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் ‘சைபர் தடய ஆய்வகம்’ - அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: இணைய குற்ற வழக்குகளில் விரைவாகவும், துல்லியமாகவும் துப்புதுலக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தல், தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாகப் பயன்படுத்தல், இணையம் மூலம் ஏமாற்றுதல், கணினிமற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களைத் திருடுதல், மற்றவர்களின்தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாகப் பயன்படுத்துவது, மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுவது, இணையவழி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளதங்களில் அவதூறு பரப்பும் செயல்களும் அதிகமாகி விட்டன.வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகக்கூறி, விவரங்களைப் பெற்று, வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுதல், பேஸ்புக் மூலம் பணம் மோசடி செய்தல்,வெளிநாட்டில் இருந்து பேசுவதாகக் கூறி, திருமணம் செய்து கொள்வதாக பெண்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக காவல் நிலையங்களில் தினமும் புகார்கள் அளிக்கப்படுகின்றன.

2020-ல் இந்தியாவில் சைபர்க்ரைம் தொடர்பாக 50 ஆயிரம்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 11.8 சதவீதம் அதிகமாகும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் சைபர் க்ரைம் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வசதியாக, சென்னை போலீஸாருக்கு கணினித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், சைபர் குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் விரைந்து புலன்விசாரணை மேற்கொள்ளவும், சந்தேகமின்றி துல்லியமாக குற்றம்புரிந்த நபர்களை அடையாளம் காணும் வகையிலும் சென்னையில் ‘சைபர் தடயங்கள் ஆய்வகம்’ அமைக்கப்பட்டுள்ளது.

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இந்த ஆய்வகம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வகத்தில் தடய அறிவியல் துறையினர், காவல் துறையினர் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தனியார் துறையைச் சேர்ந்தஇருவரும் பணியில் அமர்த்தப்பட்டுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்