பேருந்து படிகளில் மாணவர்கள் பிடிவாத பயணம்: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மதுரையில் பேருந்தின் படியில் பயணம் செய்வது தொடர்பாக மாணவர்கள்-போக்குவரத்து ஊழியர்களிடையே நேற்று ஏற்பட்ட மோதலால் பேருந்து சேவை அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று காலை மாணவர்கள் மேலூர் அரசு பேருந்தில் பயணி்த்தனர். இதில் பலரும் படிக்கட்டில் பயணித்த நிலையில், அவர்களை பேருந் துக்குள் வருமாறு ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை அழைத் துள்ளனர். ஆனால், மாணவர்கள் பேருந்துக்குள் வரவில்லை.

இதையடுத்து மாணவர்கள், ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலை யத்தை வந்தடைந்தது.

அங்கு ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்க மறுத்துவிட்டார். மற்ற பேருந்துகளையும் நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

போக்குவரத்து அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத் தியபின் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 30 நிமிடம் பேருந்து சேவை தடைபட்டது.

இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், மாண வர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் எங்களை பணியிடை நீக்கம் செய்வதாக அரசு அறிவித் துள்ளது. சட்டத்தை மீறுவோரை தண்டித்தால் மட்டுமே இப்பி ரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

எங்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதிக கூட்டம், மாணவர்களிடையே கட் டுப்பாடு இல்லாத காரணங்களால் படிக்கட்டில் பயணம் செய்யும் பிரச்சினை தொடர்கிறது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE