திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த ஆங்குணம் கிராமத்தில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் வெறையூர் அடுத்த ஆங்குணம் கிராமத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளதாக தி.மலை மரபுசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆங்குணம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பலகை கல் சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டது. அரை வட்டவடிவில் செதுக்கப்பட்டு, அதன் உள்ளே 8 கரங்களுடன் புடைப்பு சிற்பமாக கொற்றவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கரண்ட மகுடம், வட்டமான முகத்தில் தடித்த உதடுகள், உருளையான கண்களுடன் உள்ளார்.

கழுத்தில் ஆரம் போன்ற சவடியும், கரங்களில் தோள்வளை மற்றும் கைவளையுடன், மார்பில் பட்டையான கச்சை அணிந்துள்ளார். 8 கரங்களில், மேல் வலது கரத்தில் சங்கும், ஏனைய கரங்களில் வாள், அம்பு ஏந்திய நிலையிலும், இடையின் மீது ஊறு முத்திரையில் கீழ் வலது கரமும் உள்ளது. அதேபோல் மேல் இடது கரத்தில் சக்கரமும், ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் உள்ளது. இடை ஆடையை சுருட்டி பிடித்தபடி கீழ் இடது கரம் உள்ளது.

கொற்றவையின் இருபுறமும் இருவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கைகூப்பி வணங்கிய நிலையில் ஒரு வீரரும், நவகண்டம் தரும் வகையில் மற்றொரு வீரர் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றபடி காட்சி தருகிறது. கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து பார்க்கும்போது, பல்லவர் கால கலை அம்சத்தை சேர்ந்தது என்றும், இதன் காலம் கி.பி. 8 –ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

விஷ்ணு துர்கை சிற்பம்

இதேபோல், விவசாய நிலத்தில் 3 அடி உயரம் உள்ள விஷ்ணு துர்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. சதுர் புஜத்துடன் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், கீழ் வலக்கரம் அபய முத்திரையிலும், இடை மீது ஊறு முத்திரையில் கீழ் இடது கரம் உள்ளது.

சிற்பத்தின் ஆடை அணிகலன் களை வைத்து பார்க்கும் போது, இதன் காலம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்களின் சிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்