இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு. அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 69 மீனவர்களை கைது செய்ததுடன் மற்றும் அவர்கள் பயணித்த 11 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்துவைத்துக்கொண்டுள்ளது தென் கடலோர மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இலங்கை கடற்படைவெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ''இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தொடர் வேட்டையாடுவதைத் தடுப்பதற்காக கடந்த 3 நாட்களாக இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் 68 இந்திய மீனவர்கள் (அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். 10 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு மீனவர்களின் வேட்டையாடும் செயலை முறியடிக்கும் விதமாக 24 மணி நேரமும் இலங்கை கடற்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது'' என்று இலங்கை கடற்படை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் இந்த நிமிடம் வரை மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேரை மீட்கக் கோரி ராமேஸ்வரம், மண்டபத்தைத் தொடர்ந்து பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்கச்சிமடத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்திலும் பாம்பன் மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்