சர்வதேச விமான நிலையமாக்க முடியாது: மத்திய அமைச்சர் கைவிரித்ததாக மதுரை எம்பி தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியாவிடம் மதுரை எம்பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் கடிதம் அளித்தனர்.

இக்கடிதத்தில், எம்பிக்கள் கார்த்தி பி.சிதம்பரம், பி.வேலுச்சாமி, தனுஷ்குமார், கே.நவாஸ்கனி, விஜய் வசந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா பதி லளிக்கையில், மதுரை ஏற்கெனவே கஸ்டம்ஸ் விமான நிலையமாக இருப்பதால் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்றார். மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன, அதேபோல் ‘பாஸா' ஒப்பந்தத்தில் இணைப்பு மையமாக இந்தியாவின் எந்த விமான நிலையத்தையும் இனி இணைக்க வாய்ப்பில்லை.

ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங் களை இணைத்து விட்டோம். எனவே மதுரையை இணைக்க முடியாது. மது ரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு இயக்குவதற்கான ஏற் பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE