தீவிரம் காட்டும் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மகன்: மதுரை திமுகவில் புதிய அரசியல் வாரிசு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மறைந்த சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகன், திமுகவில் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள அவருக்கு சீட் கிடைக்க அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், அந்த தொகுதியில் போட்டியிட மனு அளித்து காத்திருக்கும் மற்ற திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மதுரை திமுகவில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் முக்கிய நபராக திகழ்ந்தார். சிறந்த பண்பாளராக வும், நேர்மையான அரசியல்வாதியாக வும் இருந்ததால் மாற்று கட்சியினரிடத் திலும் மதிப்புமிக்கவராக இருந்தார். 2006-ம் ஆண்டு அமைச்சராக பதவி யேற்று விட்டு, மதுரை திரும்பும் வழியில் ரயிலிலேயே அவர் மரணமடைந்தார்.

அவரது மகன் தியாகராஜன், இவர் அமெரிக்காவில் இருந்தார். தந்தை மறைவுக்குப் பின்னரும் அரசியலில் ஈடுபட விருப்பமின்றி அமெரிக்காவி லேயே குடும்பத்துடன் இருந்தார். பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் ஆதரவாளர்கள், அவர்களுடைய நலம் விரும்பிகள், தியாகராஜனை, தந்தை வழியில் திமுகவில் முழுநேர அரசியலில் ஈடுபட தமிழகம் வரும்படி, கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், யாருக்கும் பிடி கொடுக்காமல் தியாகராஜன் அமைதியாக அமெரிக்காவிலேயே இருந்துவிட்டார்.

இந்நிலையில், விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற விருக்கும் நிலையில், தியாகராஜன் தமிழகம் திரும்பியதோடு, தந்தையைப் போல திமுகவில் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் நினைவு தின நிகழ்ச்சி, மதுரையில் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முக்கிய பிரமுகர்கள், தியாகராஜனை அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தி னர். அதற்கு பதில் அளித்து பேசிய தியாகராஜன், திமுகவில் முழுநேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். அதற்காக, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன் என்றார்.

பின்னணியில் மு.க. ஸ்டாலின்

தியாகராஜனின் அரசியல் வரு கைக்கு பின்னணியில், திமுக பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட மு.க. அழகிரி இல்லாத மதுரை திமுகவை பலப்படுத்த, கட்சி மேலிடமே பி.டி.ஆர். மகனை களம் இறக்கிவிட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட தியாகராஜன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அந்தத் தொகுதியின் முன்னணி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்