ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த விமானப் பயணிகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்பட்த்திட வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழகத்திக்குள் நேரடியாக வருபவர்களையும் வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ தமிழ்நாட்டுக்குள் வருபவர்களையும் பரிசோதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளித்தாலும் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதியாகி சிலருக்கு அறிகுறி கண்டறியப்பட்டதாக வருகின்ற செய்திகளை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வண்ணம் மிக ஆபத்தான நாடுகள் என்று கருதக்கூடிய ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போஸ்ட்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மற்ற பயணிகளை பொறுத்தவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு விழுக்காடு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் குறைந்த ஆபத்துள்ள நாடுகளான காங்கோ, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து விமானம் வாயிலாக வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுமதிகோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் மிகுந்த ஆபத்துள்ள மற்றும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் வாயிலாக இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்தில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ, அல்லது ரயில் மூலமாகவோ தமிழகத்திற்கு வரும் பயணிகளும் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்கெனவே மற்ற மாநிலங்களில் உள்ள விமானநிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவர்கள் தமிழகத்திற்குள் நுழையும் போது அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் வேறு மாநில விமான நிலையங்களில் மேற்கொண்ட பரிசோதனைக்குப் பிறகுகூட அவர்களைத் தொற்று தாக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, அண்மையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்திறங்கி அதன்பிறகு ஓரிரு நாட்கள் கழித்து சாலை வழியாகவோ ரயில் மூலமாகவோ தமிழகத்திற்கு வந்தவர்களையும் வருகின்றவர்களையும் கரோனா தொற்று பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்.
அந்தப் பரிசோதனையில் தொற்று இல்லை என்றால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, 8வது நாளில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குப் பிறகும் தொற்று இல்லை என்றால் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம். மாறாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதோடு அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் அவர்களோடு தொடர்பு உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒமைக்ரான் பரவலை இன்னும் வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும். டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவக் கூடியது என்றும் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் இது தாக்கும் என்றும், இந்தப் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிட்டால் 2022 ஆம் ஆண்டில் இந்தத் தொற்று முடிவுக்கு வந்துவிடும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவத் தொடங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளைக் கழுவுதல், கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுதல் ஆகிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம். ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் முகக் கவசம் அணிவதில்லை. இதற்கான விழிப்புணர்விலும் தொய்வு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதும், தடுப்பூசி செலுத்தியவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு விரைந்து செலுத்துவதும் அரசின் கடமை.

எனவே முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்பட்த்திட ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழகத்திக்குள் நேரடியாக வருபவர்களையும் வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ தமிழ்நாட்டுக்குள் வருபவர்களையும் பரிசோதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை நாட்டு மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்