சென்னை: எலும்புகள் தானம் வழங்கப்படுவதால் விபத்து மற்றும் எலும்பு சம்பந்தமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெற முடியும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இன்று (21-12-2021) மதுரை மாவட்டத்தில் எலும்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு தானமாகப் பெறப்படும் எலும்புகளைச் சேகரிக்கும் வகையில் புதிதாக எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவப் படிப்பிற்காகத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, பல துறை சார்ந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
"உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எலும்புகளைப் பதப்படுத்துதல், மீட்டெடுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்காக மதுரையில் எலும்பு வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
» பிறமாநிலங்களில் பாடநூல்களை அச்சிடுவதால் தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிப்பு: அரசுக்கு வைகோ கண்டனம்
» தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்
அதன்படி, விபத்து மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் முறிவு ஏற்பட்டு மீண்டும் இணைக்க முடியாத எலும்புகள் அனைத்தும் விபத்து ஏற்பட்ட 14 மணி நேரத்திற்குள் சேகரிக்கப்படும். அவை மதுரையில் உள்ள வங்கியில் 5 ஆண்டுகள் சேகரிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பயன்படாத அல்லது காலாவதியான எலும்புகள் உரிய முறையில் அழிக்கப்படும்.
உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனிடையே, விபத்து மற்றும் எலும்பு சம்பந்தமான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தானமாகப் பெறப்படும் எலும்புகளால் பயன்பெற முடியும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago