திருச்சி: சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியில் உள்ள பிற மாணவர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களில் விடுதி மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேருக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளித் தொல்லை இருந்தது.
இதையடுத்து, 7 பேரும் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 7 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பள்ளிக்கு டிச.25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், பள்ளியில் உள்ள பிற மாணவ- மாணவிகள் 600 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இன்று பள்ளி வளாகத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
» துண்டுச்சீட்டில் அளித்தாலும் கோரிக்கையை நிறைவேற்றுவதே எங்கள் கடமை: அமைச்சர் அன்பில் மகேஸ்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குக: வேல்முருகன்
இதேபோல், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவி பயிலும் வகுப்புக்கு மட்டும் டிச.23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago