கடலூரில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி மூவர் உயிரிழப்பு

By க.ரமேஷ்

கடலூர்: கடலூரில் இன்று (டிச.20)அதிகாலையில், கார் மரத்தில் மோதிய விபத்தில் அதில் பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் ராமு( 65), இவரது மனைவி லலிதா (59) . இவர்கள் இருவரும் சென்னை ஆவடியில் உள்ள மருமகன் ரமேஷ் வீட்டிற்கு நேற்று (டிச.19) நள்ளிரவில் காரில் புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கோதண்டம் (50) காரை ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில், இன்று (டிச.20) அதிகாலை 4.45 மணிக்கு கடலூர் சிப்காட் வழியாக கார் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நிலை தடுமாறிய கார் டாக்ரோஸ் கம்பெனி அருகே சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலிலேயே லலிதா உயிரிழந்தார். ராமுவும், கோதண்டமும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரின் தூக்க கலக்கத்தினால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்