திருவண்ணாமலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலைக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பயன்படுத் தப்பட்ட லாரி கவிழ்ந்து விபத் துக்குள்ளானது.

திருவண்ணாமலை நகரம் அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38 கோடியில் மேம் பாலம் (திண்டிவனம் ரயில்வே கேட்) அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது, அண்ணா சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, கழிவுநீர் கால்வாய் அமைக்க, பள்ளம் தோண்டும் பணி நேற்று நடை பெற்றது. கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்பகுதியில் இருந்து எடுக் கப்பட்ட கருங்கற்கள் மற்றும் மண் ஆகியவை, நிறுத்தி வைக் கப்பட்டிருந்த டிப்பர் லாரியில் கொட்டும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, லாரியின் இடது பக்க பின்பகுதி, பாரம் தாங்காமல் மண்ணில் அழுத்தி, கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனை உணர்ந்த லாரி ஓட்டுநர் ஏழுமலை, சாதுர்யமாக செயல்பட்டு லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுசுவர் சேதமடைந்துள்ளது. இதையடுத்து 3 பொக்லைன் இயந்திரங்கள் வர வழைக்கப்பட்டு பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE