நியாய விலைக்கடைகளில் ஜன.3 முதல் பொங்கல் தொகுப்பு: 21 பொருட்களுடன் விநியோகம்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் ஜனவரி 3-ம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2006-ம்ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புஅரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டுபொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில்வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, கரும்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கடுகு, சீரகம், புளி, கடலை பருப்பு, உளுந்து, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் துணிப்பை ஆகிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைகள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்க, கூட்டுறவுத் துறை சார்பில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தற்போது அந்தந்த மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை ஜன.3-ம் தேதி நியாயவிலைக்கடைகள் மூலம் தொடங்க,தமிழக உணவுத் துறை செயலர்முகமது நசிமுத்தின், மாவட்டஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து தகுதியானபயனாளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கவேண்டும் என்றும் இப்பணிகளுக்கு தேவைப்படும் இதரதுறைகளின் ஒத்துழைப்பையும்கேட்டுப் பெற்று, பொருட்களை விநியோகிக்க வேண்டும், பொருட்களை தடையின்றி விநியோகிப்பதை கண்காணிக்க தேவையான குழுக்களை ஏற்படுத்த வேண்டும்என்றும் அவர் அறிவுறுத்தியுள் ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE