கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை மீனவர் கிராமத்தில், இப்போதெல்லாம் நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. எப்போதும், எங்கு வேண்டுமானாலும் வெடி குண்டு வெடிக்கலாம் என்ற நிலையில், அப்பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்கு கோடியில், கூடங்குளம் அணு உலையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் இருக்கிறது இடிந்தகரை கடற்கரை கிராமம். ஏழை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இக்கிராமம் மீன்பிடித்தல், வெளி ஊர்களுக்கு விற்பனை செய்தல் என 10 ஆண்டுகளுக்கு முன் வரை அமைதியான பூமியாகத்தான் இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடங்கிய போராட்டத்தின் மையக் களமாக இடிந்தகரை மாறிய பின்னர் இதுபோன்ற வெடிகுண்டு சம்பவங்கள் இடிந்தகரையின் இன்னொரு கோரமுகத்தை வெளிக் காட்டின.
குண்டு கலாச்சாரம்
இடிந்தகரையில் நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைத்திருப்பது, கையாளப்படுவது குறித்தெல்லாம் கடந்த ஆண்டில்தான் வெளியுலகுக்கு தெரியவந்தது. ஆனால், அணு உலை எதிர்ப்பு போராட் டத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவே இவ்வாறு விஷமப் பிரச்சாரம் செய்யப்படுவதாக போராட் டக் குழுவினர் ஆத்திரப் பட்டனர்.
இந்நிலையில்தான், 2013 நவம்பர் 26-ம் தேதி இரவு இடிந்த கரை, சுனாமி காலனியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் ஒரு சேர வெடித்துச் சிதறின. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 அப்பாவிகள் உயிரிழந்தனர். போலீஸார் அங்கு சோதனை நடத்தி, வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
தொடர் நடவடிக்கை இல்லை
ஆனால், தொடர் நடவடிக்கை யாக அப்பகுதியை போலீஸார் தங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வரவில்லை. தொடர்ந்து அங்கு சோதனை நடத்தி நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களாகவே இடிந்தகரையில் இரு தரப்பு மீனவர்கள் மோதல் பூதாகரமாகி வருகிறது. மோதலின் போது, நாட்டு வெடிகுண்டுகள் கையாளப்படுவது குறித்தும் போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவங்களால், மீனவர்களின் படகுகள், வீடுகள் சேதமடைகின் றன.
வெடிகுண்டுகள் பதுக்கல்
இடிந்தகரை கடற்கரை பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக, இரு தரப்பு மீனவர்களும், பெண்களும் பரஸ்பரம் புகார் தெரிவித்து, திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர். ஆனால், அந்த புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ராதாபுரத்தில் இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. ‘வெடி குண்டுகளை அப்புறப்படுத்த போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக’ மீனவர் பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தையின்போது தெரிவித்தனர். ஆனால், இடிந்தகரை மற்றும் அருகிலுள்ள மீனவர் கிராமங்களில் நாட்டு வெடிகுண்டுகளை கண்ட றிந்து, கைப்பற்றி, அழிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கவில்லை.
பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இடிந்தகரை பகுதியில் இருதரப்பு மீனவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு, நாட்டு வெடி குண்டுகள் வீசப்படுகின்றன. இது போன்ற பல சம்பவங்கள் வெளியே தெரியாமலும் நடந்து வருகின்றன.
நடவடிக்கை அவசியம்
இந்நிலையில்தான், 23-ம் தேதி பகலில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசி, இரு தரப்பு மீனவர்கள் மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் இல்லை என்றாலும் இடிந்தகரையிலுள்ள சாதாரண மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இக்கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கையாளப்படுவது குறித்து ஏற்கெனவே தெரிந்திருந்தும் போலீஸார் கண்டும், காணாமல் இருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மீனவர்கள் ஒருவருக்கொருவர் வெடிகுண்டுகளை வீசி பலியாகட்டும் என்று போலீஸார் ஒதுங்கி யிருக்கிறார்களா, கூடங்குளம் அணுஉலைக்கு 2 கி.மீ. தொலை வில் வெடிகுண்டுகள் கையாளப் படும் அபாயம் குறித்து அதிகாரிகள் ஏன் கவலைப்படவில்லை என் றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இங்கு பதுக்கி வைத்துள்ள நாட்டு வெடிகுண்டுகளை கண்ட றிந்து, கைப்பற்றி அழிக்க, போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியி ருக்கிறது.
நீண்ட காலத்துக்கு அறவழி போராட்டம் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்த இடிந்தகரையின், ‘வெடிகுண்டுகள் வீச்சு’ என்ற கோரமுகம் தற்போது வெளியுல குக்கு தெரியவந்துள்ளது. இத்த கைய சமூக விரோதச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரி களும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago