மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளில் 200 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் பள்ளிக் கழிப்பறைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் 200 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு அதனை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையாக சேதமடைந்த கட்டிடங்களின் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களுக்கு சேதமடைந்த கட்டிடங்களை இடித்து மாற்று ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகளிலும் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கட்டிட சேதம் குறித்து தகவல் வந்தால் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அங்கன்வாடிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago