மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் 2 நாட்கள் இசை, கலை நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இன்றும், நாளையும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், `ஆன் தி ஸ்டீரிட் ஆஃப் சென்னை' கலைக் குழுவுடன் இணைந்து இன்றும், நாளையும் (டிச. 18, 19) விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, கிண்டி, விமானநிலையம், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர், மண்ணடி, சென்ட்ரல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மெல்லிசை, கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிர்வு கலையகம் அமைப்ப இணைந்து, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நாளை பறையாட்டம் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்