மழையால் தண்ணீர் தேங்கிய ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பேவர் பிளாக் அமைத்த தனியார் பள்ளி மாணவர்கள

மழை நீர் தேங்கி சகதிபோல் காட்சியளித்த அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தை மற்றொரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பேவர் பிளாக் வளாகமாக மாற்றிக் கொடுத்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பலர் சர்வதேச, மாநில, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். மழை யால் பள்ளி முன் தண்ணீர் தேங்கி பல நாட்களாக வடியாமல் இருந்தது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய வசதிகளை ஏற்படுத்த பல்வேறு தொண்டு நிறுவனங்களை பள்ளியின் இடைநிலை ஆசிரியரும், சதுரங்க பயிற்சியாளருமான ஞா.செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். இவரது கோரிக்கையை ஏற்று டிவிஎஸ் லெட்சுமி மெட்ரிக் பள்ளியில் 1994-ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சேர்ந்து ரூ.1 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்துக் கொடுத்தனர். பள்ளிக்கு இரு மின் விசிறிகளையும் வழங்கினர்.

இதற்காக அப்பள்ளியின் முன் னாள் மாணவர்கள் குழுவின் டி.ஜே.ராம்லால், ஆர்.தர், கே.கார்த்திக், செந்தில் ஆகி யோருக்கு அ.செட்டியார்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் மு.மணிமேகலை, ஆசிரியர்கள் ஞா.செந்தில்குமார், ஜோ.சியா மளா நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE