பாரதியை இளையோரிடம் கொண்டுசெல்லவும் அவரை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் 482 கிலோ சாக்லெட்டுகளைக் கொண்டு சுமார் 6 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள அவரது சாக்லெட் சிலை பலரையும் கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் சாக்லெட் பேக்கரியில் ஆண்டுதோறும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் புதிய கலைத்திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இவ்வகையில் கடந்த காலங்களில் சாக்லெட்டைக் கொண்டு ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், எஸ்பிபி ஆகியோரின் உருவங்களை வடிவமைத்தனர். தற்போது பாரதி சிலையை வடிவமைத்துள்ளனர்.
» புதுப்பிக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டிடம்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
சாக்லெட் சிலையை வடிவமைத்தது பற்றி இந்நிறுவனத்தினர் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் 2022 புத்தாண்டையொட்டி பாரதியாரை கவுரவிக்கும் வகையிலும், அவரை அனைத்து இளையோரிடமும் கொண்டுசெல்லும் வகையிலும் 482 கிலோ சாக்லெட்டைக் கொண்டு 6.6 அடி உயரத்தில் சிலை வடிவமைத்துள்ளோம்.
பாரதி நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ள இச்சாக்லெட் சிலையை வடிவமைக்க 106 மணி நேரமானது.
பாரதியின் வரிகளான "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்றும் எழுதியுள்ளோம். சாக்லெட்டில் புதுமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இச்சிலைகளை சாக்லெட்டில் வடிவமைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago