சென்னை: மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்களில் பாசனத்திற்காக வரும் 16.12.2021 முதல் 15.01.2022 முடிய 31 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 கன அடி/வினாடி வீதம் கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாசனம் பெறும் 45,000 ஏக்கர் பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 01.08.2021 முதல் 15.12.2021 முடிய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஏற்கெனவே ஆணையிடப் பட்டு அதன்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்களில் பாசனத்திற்கு 15.12.2021-க்கு பிறகு நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விடுமாறு கோரிய மேட்டூர் வலது கரை கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் பாசனத்திற்கு 16.12.2021 முதல் 15.01.2022 முடிய 31 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 கன அடி/வினாடி வீதம் கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago