இழுவலையைத் தடை செய்ய வேண்டும்: படகுகளில் கருப்புக் கொடியுடன் சிறு தொழில் செய்யும் மீனவர்கள் போராட்டம்

By க.ரமேஷ்

கடலூர் மாவட்டத்தில் இழுவலையைத் தடை செய்யக் கோரி படகுகளில் கருப்புக் கொடியுடன் சிறுதொழில் செய்யும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் சிறுதொழில் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில் இழுவலை பயன்படுத்தும் மீனவர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவதால் தங்களது சிறுதொழில் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர். இழுவலை பயன்படுத்தும் மீனவர்களின் வலைகள் கண் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறைவாக இருக்கக் கூடாது, 240 குதிரைத் திறன் குறைவான இன்ஜின்களை மட்டும் பயன்படுத்த வேண்டும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இருந்தும் அவற்றை மீறி மீன் பிடிப்பதால் தங்களது சிறுதொழில் பாதிக்கப்படுவதாகக் கூறிப் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, எம்ஜிஆர் திட்டு, ராசக்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடலூர் மீன்வளத்துறை அலுவலகம் அருகில் படகுகளில் இருந்தவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். மேலும் இழுவலை காரணமாகத் தாங்கள் தொழில் செய்ய முடியாததால் தங்களது படகு, வலை மற்றும் படகுகளின் உரிமம் ஆகியவற்றை ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீனவர்கள் தங்களது படகு உரிமத்தை ஒப்படைக்க முயன்றனர். அப்போது மீன்வளத்துறை அதிகாரிகள், விதிமுறைகளை மீறிச் செயல்படும் இழுவலைகள் பறிமுதல் செய்யப்படும் என உத்தவாதம் அளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். இழுவலை விதிமுறைகளை மீறுவதை மீன்வளத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்தும் வரை தங்கள் தொழிலுக்குச் செல்லப் போவதில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்