கோவை குற்றாலம் டிச.14 முதல் மீண்டும் திறப்பு

By க.சக்திவேல்

தொடர் மழைக்குப் பிறகு கோவை குற்றாலம் வரும் 14-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் கோவை குற்றாலத்துக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நீர்வரத்து குறைந்துள்ளதால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்பில்லை என்பதால் டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறியதாவது:

"கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர், அதேபோல காலை 10.30 மணி முதல் 11 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்".

இவ்வாறு மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்