கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் 1952-ல் நடந்த முதலாவது சட்டப்பேரவை தேர்தலில் 9 நாட்கள் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போதுதான்.
அதன் பிறகு 1957-ல் நடந்த 2-வது சட்டப்பேரவை தேர்தலின்போது 5 நாட்களும், 1962-ல் 3-வது சட்டப்பேரவை தேர்தலின்போது 4 நாட்களும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 1967, 1971-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 3 நாட்களும், 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் 2 நாட்களும் வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு ஒரே நாளில் நடந்து முடிந்துள்ளது. இடையில் 1996-ம் ஆண்டு மட்டும் 2 நாட்கள் நடத்தப்பட்டது.
மாநிலத்தின் விரிவான எல்லைப் பகுதிகள், அதிக தொகுதிகள் போன்ற காரணங்களால் முதலாவது பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டன. மேலும், போக்குவரத்து வசதி குறைந்த காலக்கட்டம் என்பதால் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளுக்கு அதிக அவகாசம் தேவைப்பட்டது.
தேர்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்தியது, நவீனப்படுத்தியது மற்றும் போக்குவரத்து வசதிகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் ஒரே நாளில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் இதற்கு மிக முக்கிய காரணம் என்கிறார் தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா. ‘‘கள்ள ஓட்டு அச்சுறுத்தல் குறையக் குறைய, வாக்குப்பதிவு நிகழ்வுகள் சுமுகமாகியுள்ளன. மேலும், தமிழகம் சிறிய மாநிலம் என்பதால் ஒரே நாளில் வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலாக உள்ளது. இங்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பே காரணம்’’ என்கிறார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago