முக்கிய நகரங்களில் நடை பாதைகள் காணாமல் போய் விட்டதால், சாலைகளின் ஓரம் வரையில் வாகனங்கள் செல்கின்றன. இதனால் நடந்து செல்லவே மக்கள் அச்சப் படுகின்றனர். நடந்து செல்ல விரும்புவோரும் வாகனங்களில் சென்றுவிடலாம் என மனம் மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகள் அமைக்கும்போதே கட்டாயம் நடைபாதைகள் அமைக்க வேண்டுமென விதி உள்ளது. ஆனால், சில சாலைகளில் மட்டுமே நடைபாதைகள் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளால் நடைபாதைகள் மறைக்கப்பட்டுள்ளன. பெரும்பா லான இடங்களில் நடைபாதை களே இல்லாமல், சாலையின் இருபுறமும் இறுதி வரையில் வாக னங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதுதான் உண்மை.
தேசிய குற்ற ஆவண பதிவேட்டு காப்பகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, மிதிவண்டி பயன்படுத்தி சாலை விபத்து ஏற்பட்டதில் ஆயிரத்து 208 பேர் இறந்துள்ளனர். பாதசாரிகள் 6 ஆயிரத்து 690 பேர் இறந்துள்ளனர். மேலும், 21 ஆயிரத்து 428 பேர் காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் 37 ஆயிரத்து 316 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 615 பேர் காயமடைந்துள்ளனர். 7.5 சதவீத விபத்துகள் பாதசாரிகள் சாலை களை கடக்கும் போது ஏற்படுவது தெரியவந்துள்ளது. 24.6 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்க ளால் ஏற்பட்டுள்ளன. நாட்டின் 53 நகரங்களில் கணக்கெடுக்கும் போது, அதிகபட்சமாக கொல்கத் தாவில் 214 பேரும், சென்னையில் 206 பேரும் சாலையை கடக்கும் போது இறந்துள்ளனர்.
நடைபாதைகள் மற்றும் மிதிவண்டியின் அவசியத்தை உணர்ந்து நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் சிறப்பு திட்டங்கள் வகுத்து சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், முக்கிய நகரங்களில் 30 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் இயக்குநர் (ஆலோசகர்) எஸ்.சரோஜா, ஆய்வாளர் சுமனா நாராயணன் கூறியதாவது:
நடந்து செல்லும் மக்களை ஊக்குவிக்க, அரசு ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய நடைபாதைகள் இல்லாததால், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திற னாளிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படு கின்றனர். ஒவ்வொரு பகுதிக ளுக்கும் சாலைகள் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவில் அந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல நடைபாதைகள் அவசியமாக இருக்க வேண்டும். குறிப்பாக முக்கிய குடியிருப்புப் பகுதிகள், மக்கள் அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து போதிய நடைபாதைகள் அமைக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும், அதற்கென தனி பாதைகளும் அமைக்கப்படுகின்றன. இதேபோல், நடை பாதைகளும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதனால், சாலை விபத்துகள் 30 சதவீதம் வரை குறைந்துள்ளன. நம் நாட்டிலும் இதுபோல் ஊக்குவித்தால் சாலை விபத்துகள் குறையும், வாகன பயன்பாடுகளும் கணிசமாக குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago