கடந்த மாதம் நடைபெற இருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
"தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 08.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேர்வுக்கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் கிழமை 20.12.2021 முதல் வெள்ளி கிழமை 24.12.2021 வரை மற்றும் தேர்வுகள் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி தேர்வுகள் வரை நடைபெறும்.
20-ம் தேதி திங்கள் கிழமை தமிழ் மொழித் தேர்வும், 21-ம் தேதி செவ்வாய் கிழமை ஆங்கிலத் தேர்வும் நடைபெறவுள்ளது. இதேபோல் 22-ம் தேதி புதன் கிழமையில் கணிதம், 23-ம் தேதி வியாழன் கிழமையில் அறிவியல் மற்றும் 24-ம் தேதி வெள்ளிக் கிழமையில் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
» மாணவர் மணிகண்டன் மர்ம மரணம்; வெளிப்படையான விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டும்: கமல்
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் புதிய தேர்வுக்கால அட்டவணையின்படி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை 14.12.2021 முதல் www.dgn.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET-என்ற வாசகத்தை CLICK செய்தால் “ESLC DECEMBER 2021 EXAMINATION CANDIDATE HALL TICKET” என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத் CLICK செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) மற்றும் பிறந்த தேதி-யை (DATE OF BIRTH) பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்."
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago