புதுச்சேரியில் பாசனகுளத்தின் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படு கின்றன. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன. இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே கண்டுகொள்ளாததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
புதுவை மாநிலம் பாகூர், குருவிநத்தம், கிருமாம்பாக்கம், கன்னியக் கோயில், மணப்பேட்டை, மதிகிருஷ் ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், உச்சிமேடு தாங்கல் ஏரிக்கரையில் இருந்து 10-15 மீட்டர் தொலைவில் நெற்பயிர்களை ஒட்டியுள்ள நிலங்களில் கடந்த இரு மாதங்களாக முழு வீச்சில் கொட் டப்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக உச்சிமேடு ஏரி சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில், “சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு பாகூர் கொம்யூன் தரப்பினர் கழிவுகளை கொட்டினர்.
இது விதிகளுக்கு புறம்பாக இருந்ததால் அப்போதைய ஆளுநர் அவ்விஷயத்தில் தலையிட்டு, குப்பைக் கொட்டுவதை தடுத்து நிறுத்தினார்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, நீர்நிலையின் 50 மீட்டர் முதல் 100 மீட்டர் வரையிலான சுற்றளவு பசுமை மண்டலமாக கருத வேண்டும். நீர்நிலைகளைச் சுற்றி கழிவுகளை வெளியேற்ற அனுமதிக்கும் எந்த நடவடிக்கையும் கூடாது. ஏரிக் கரையை குப்பை மேடாக்கக் கூடாது. ஆனால் இது எதையும் கடைப்பிடிப் பதில்லை. ஏரியைச் சுற்றிலும் குப்பை தேங்கியுள்ளதால், அறுவடை தருணத்தில் இங்கு அமைக்கப்பட்ட களத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
“கனமழை பெய்த கடந்த வாரங்களில் இந்தக் கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசியது” என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின் றனர். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தும் பொறுப்பு கொம்யூன் பஞ்சாயத்துக்கே உள்ளது. திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்அட்டவணை (1)-ன் படி ஆற்றின்100 மீட்டர் மற்றும் குளத்தின் 200 மீட்டர்களுக்குள் குப்பை கொட்டும் இடங்கள் அனுமதிக்கப்படாது. நாங்கள் எந்தவொரு குப்பை கிடங் கிற்கும் அனுமதி வழங்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
பாகூர் கொம்யூன் வட்டாரங்களில் விசாரித்தபோது, “மணப்பட்டு ஏரிக்கரை அருகே இருந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தின் குப்பைக் கிடங்கு மூடப்பட்டு சித்தேரி அருகே புற வழிச்சாலை அமைக்க அரசால் கையப்படுத்தப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.
புறவழிச்சாலை பணி தொடங் கப்பட்டுள்ளதால் உச்சிமேடு தாங்கல் ஏரி அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்து இடத்தில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு, மதிகிருஷ்ணாபுரம் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் குப்பை அங்குதான் கொட்டப்பட்டு வருகிறது” என்கின்றனர்.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண, தற்போதைய ஆளுநர், முதல் வர் மற்றும் உயர் அதிகாரிகள் வரை இச்சிக்கலை கொண்டு சென்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago