6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த 67 வயது முதியவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குமாரபாளையம் வால்ராஜாபாளையத்தைச் சேர்ந்தவர் கே.பழனிசாமி (67). அவர் ஆடு, மாடு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் முதியவர் பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி சிறுமியை பாலியியல் துன்புறுத்தல் செய்த பழனிசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்திரவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago