தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் சர்ச்சைக்குரிய கிரவுன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்ட நிலையில், அங்கு கிரவுன் எனப்படும் திட்டத்திற்கான சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டிருக்கிறது.
ஆரோவில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மரங்களை நேற்று நகர வளர்ச்சிக் குழு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 30 மரங்களை வெட்டியதை அறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் எதிரொலியாக மரங்களை வெட்டும் பணி கைவிடப்படுவதாக அறிவித்த நகர வளர்ச்சிக் குழு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மீண்டும் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியுள்ளது.
அதையறிந்த குடியிருப்பு வாசிகள் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று, ஆரோவில் குடியிருப்பாளர்களின் சங்கத்த்தின் ஒப்பதலைப் பெறாமல் மரங்களை எப்படி வெட்டலாம் எனவும், கிரவுன் திட்டத்திற்காக மாற்றுப் பாதை அமைக்க வலியறுத்தும் நிலையில் மரத்தை வெட்டக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தபோது, விழுப்புரம் மாவட்ட போலீஸார் அவர்களை தடுத்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மரங்கள் வெட்டி முடித்த நிலையில் அவர்கள் அதிகாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
» திருமணத்தில் எஞ்சிய உணவு ஏழைகளுக்கு விநியோகம்: சமூக வலைதள மனங்களை வென்ற மேற்கு வங்கப்பெண்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago