சிலர் சுய விளம்பரத்துக்காகவும், இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் மீது குற்றம் சாட்டுவதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றஅவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘‘மணத்தட்டை ஊராட்சி மன்ற செலவினங்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, மன்ற அலுவலகத்தை ஊராட்சித் தலைவர் பூட்டி, அதன் சாவியை ஒன்றிய ஆணையரிடம் ஒப்படைத்துள்ளாரே?’’ என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘அவர் என்னென்ன பணிகளுக்கு ஆட்சியரிடமோ அல்லது திட்ட இயக்குநரிடமோ நிதி கேட்டார் என்ற விவரத்தை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. அப்படி ஏதாவது அவர் கடிதம் எழுதியிருந்தால் மாவட்ட ஆட்சியர் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார்.
அதிகளவில் முகாம்கள்
சிலர் சுய விளம்பரத்துக்காகவும், தங்களுடைய இருப்பைக் காட்டி கொள்வதற்காகவும் இதுபோல நடந்து கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் மாவட்ட ஆட்சியர்தலைமையில் அதிக முகாம்கள்நடந்துள்ளன. அவர்களுக்காகஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு‘செல்’ உருவாக்கப்பட்டு அடையாள அட்டை, உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய அரசின் திட்ட முகாமை ஆட்சியர் நடத்தவில்லை என கூறி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சமீபத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago