சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜவாஹிருல்லா வரவேற்பு

By செய்திப்பிரிவு

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கும், மத்திய அரசின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கும், உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் நபர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விவரங்களை, முதற்கட்டமாக அந்தந்தப் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். ஆனால், கனமழை காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை, மாணவர்கள் வருகையும் இல்லை.

இதன் காரணமாக மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை, நீட்டிக்க வேண்டும் எனவும், இந்த கல்வி உதவித்தொகை பெறக் கடந்த ஆண்டுக்கான மதிப்பெண் பட்டியல் பல்வேறு பள்ளிக்கூடங்கள் வழங்காததால் சென்ற ஆண்டின் மதிப்பெண் பட்டியல் பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் வாயிலாகக் கோரப்பட்டிருந்தது.

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை பரிசீலித்து 1. Prematric Scholarship Schemes 2. Postmatric Scholarship Schemes 3. Merit cum Means based Scholarship 4. Begum Hazrat Mahal National Scholarship ஆகிய உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை 15.12.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கால நீட்டிப்பைப் பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்