மதுரை மண்டல மின்வாரியத்தின் சார்பில் இன்று காலை கரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் மாலையில் அந்த சுற்றிக்கையை மின்வாரியம் வாபஸ் பெற்றது.
‘கரோனா’வின் அடுத்த உருமாற்றமான ஒமைக்ரான் (கோவிட்-3) வைரஸ் வெளிநாடுகளில் பரவுவதால் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பணிபுரிவோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், மதுரை மாவட்ட மின்வாரியத்தில் ஊழியர்கள் பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அனால், மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சார்பில் இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு சுற்றிக்கையில், மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் COVID 19 தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு செலுத்தக் கொள்ளாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந் 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
» கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றக் கிளை
அதனால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவர அறிக்கையை வராமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாதஅலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பல்வேறு தரப்பினர் கட்டணம் எழுப்பினர். இதையடுத்து காலையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மாலையில் ரத்து செய்யப்படுவதாக மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சார்பில் மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், அதேஅறிக்கையில், மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரும்நாட்களில் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளவும் அறிக்கையில் தலைமைப் பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago