சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி: தி.க. தலைவர் வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி தி.க. தலைவர் வீரமணி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.

முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.

11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்